Connect with us

உள்நாட்டு செய்தி

அரச பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி

Published

on

அரச பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக கல்வி அமைச்சர், மேலும் தெரிவிக்கையில் வயது வேறுபாடுயின்றி கொவிட் 19 தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறினார்.

ஜனாதிபதியுடன் சமீபத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது
அதற்கமைய, நாட்டிலுள்ள 10, 155 பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசார் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டதாவும் அமைச்சர் கூறினார்.

மாகாண ஆளுநர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்களுக்கு ஆசிரியர்களும் அதிபர்களும் கல்விசாரா ஊழியர்களும் வருகை தருவதற்குரிய திகதியும் நேரமும் முன்கூட்டியே அறிவிக்கப்படும் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்.