Connect with us

உள்நாட்டு செய்தி

வங்காலை கடற்கரையில் கரையொதுங்கிய கடலாமை

Published

on

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயளாலர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கடற்கரையில் இன்றைய தினம் காலை (15)  உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள்  மன்னார் வங்காலை கடற்கரை மற்றும் சிலாபத்துறை கடங்கரையில் கரையொதுங்கியது.

இந்த நிலையில் ஓடுகள் கடுமையாக சிதைவுற்ற நிலையில் கடலாமை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் வழங்காலை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

கடந்த வாரம் சிலாபத்துறை கடற்கரையிலும் உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரை ஒதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.