உள்நாட்டு செய்தி
இணைய கல்வி முறை வெற்றியளிக்கவில்லை
இணையம் ஊடாக முன்னெடுக்கப்படும் கல்வி முறைமையானது வெற்றியளிக்கவில்லை என்பதனை கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் இணையமூடாக கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் கல்வி ராஜாங்க அமைச்சர் தலைமையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்
அத்துடன் நூற்றுக்கு 22 வீதமான மாணவர்கள் மாத்திரமே இணையமூடான கற்பித்தல் செயற்பாட்டில் நன்மை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்கு மாற்று திட்டமொன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.