உள்நாட்டு செய்தி
ஜூன் மாதம் 2 ஆம்திகதி முதல் 5000

எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம்திகதி முதல் ஐந்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோராக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், சிறுநீரக நோய் நிலைமைக்கான கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் அங்கம் வகிக்கும் குடும்பங்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.