Connect with us

உள்நாட்டு செய்தி

“யாஸ்”சூறாவளி அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் சக்திமிக்கதாக வலுவடையும்

Published

on

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள யாஸ் எனும் சூறாவளி அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் சக்திமிக்கதாக வலுவடையும் என எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டில் கடும் காற்று மற்றும் மழையுடனான வானிலைக் காணப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய மாவட்டத்தின் நுவரெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய பகுதிகளுக்கு மண்சரிபு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின், வெலிகேபொல, ஓப்பநாயக்க, கஹவத்த மற்றும் கொலன்னா ஆகிய பகுதிகளுக்கும், குருவிட்ட, கிரியெல்ல, அயகம, எலபாத, எஹலியகொடை, கலவான, இம்புல்பே, பலாங்கொடை, நிவித்திகல, பெல்மடுல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று தீவிர புயலாக மாறிய யாஸ் புயல், நேற்று மாலைக்கு மேல் அதிதீவிர புயலாக உருவானது.

யாஸ் புயல் காரணமாக ஒடிஷா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரு மாநிலங்களில் 11லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஒடிசாவுக்கும், மேற்குவங்கத்துக்கும் இடையே மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் அதிகாலையில் பயணித்தது. வடக்கு ஒடிஷா கடற்கரைக்கும், தம்ரா துறைமுகத்துக்கும் இடையே புயல் நெருங்கி வருகிறது.

இந்த புயல் இன்று மதியத்திற்குள் வடக்கு ஒடிஷா மற்றும் பாலசோர் மாவட்டங்களுக்கு நடுவே முழுமையாக கடந்து செல்ல இருக்கிறது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 165 கிலோமீட்டர் வேகமும், சில நேரங்களில் 185 கிலோமீட்டர் வேக காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.