உள்நாட்டு செய்தி
இராணுவத் தளபதியின் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் 25 ஆம் திகதி தற்காலிகமாக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ள நிலையில், தேவையற்ற பயண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
அத்துடன், குறித்த தினத்தில் அத்தியவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளைப் பெற்றுக் கொள்ள, தமது இருப்பிடங்களுக்குஅருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி இரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல், இரவு 11.00 மணி வரை தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.