Connect with us

உலகம்

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியின் இறுதி கிரிகைகள்: இலங்கை இராணுவ தளபதியும் அஞ்சலி

Published

on

குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

கண்டோன்மென் ப்ரார் சதுக்க தகன மையத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஆகியோரின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டன.

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், உத்தரகாண்ட் முதலமைச்சர் கர்சிங் தாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மற்றும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள், முப்படை தளபதிகள் மற்றும் இலங்கை, பூடான், நேபாளம், பங்காளதேஸ்; உள்ளிட்ட நாடுகளின் இராணுவ தளபதிகளும் மலர் வளையம் வைத்து, இறுதி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து அங்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தகனக்குழிக்குள் இரு உடல்களும் வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து 17 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிபின் ராவத்துக்கு முழு இராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் பிபின் ராவத்-மதுலிகா ஆகியோரின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டன.

இந்த கோர விபத்தில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.