Connect with us

உள்நாட்டு செய்தி

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்பட்ட மே தின கூட்டம், மலையக தோட்ட பகுதிகளில் இன்றும் கொவிட் தொற்றாளர்கள்

Published

on

தலாவாக்கலை லிந்துல மட்டுல்களை தோட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாது மே தின நிகழ்வுகளை நடத்திய எழு தோட்டத் தலைவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, லக்ஷ்பான நீர் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் மேலும் 09 ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து குறித்த ஆலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஹட்டன், டன்பார் தோட்டம் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது

வெலிசர விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் இன்று (01) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது 140 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சில முடிவுகள் கிடைக்கப்பெறவுள்ளதாவும், தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட விற்பனை நிலையங்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.