உலகம்
ஒக்சிஜன் வாயுக்கசிவு 24 கொரோனா நோயாளிகள் பலி
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட ஒக்சிஜன் வாயுக்கசிவு காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஒக்சிஜன் வழங்குவது தடைப்பட்டதால், 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் ஒக்சிஜன் நிரம்பும் போது திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஒக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது
இந்நிலையில், எதிர்பாராத விதமாக டேங்கரில் இருந்து ஒக்சிஜன் வாயு பெருமளவு கசிந்துள்ளது.
இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சரிவர ஒக்ஸிஜன் வழங்க முடியவில்லை. இதனால், சிகிச்சை பெற்று வந்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வாயுக்கசிவு தொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.