உள்நாட்டு செய்தி
சட்டவிரோதமாக 98 நீர் அளவுமானிகளை வைத்திருந்த தெரணியகலை பிரதேச சபை தலைவர் கைது

சட்டவிரோதமாக 98 நீர் அளவுமானிகளை வைத்திருந்த தெரணியகலை பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெரணியகலை கும்புருகம பிரதேசத்தில் நீர் திட்டமொன்றிற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 477 நீர் அளவு மானிகள் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இனந்தெரியாத சிலரால் களவாடப்பட்டிருந்தது.
பின்னர் குறித்த களஞ்சியத்தின் எழுத்தாளர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் கடந்த தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளுக்கு அமைய 98 நீர் அளவீட்டு மானிகளுடன் சந்தேகநபரான தெரணியகலை பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
அவர் இன்று (17) பொது சொத்துச் சட்டத்தின் கீழ் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.