Connect with us

உள்நாட்டு செய்தி

மலையக மக்களுக்காக தொடர்ந்தும் போராடுவேன் – வடிவேல் சுரேஸ்

Published

on

கம்பனிகளின் வேண்டுகோளை கௌரவ நீதிமன்றம் நிராகரித்ததாக பாரளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கூறினார்.

இது பெருந்தோட்ட மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி  வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைகால தடை விதிக்குமாறு, பெருந்தோட்ட நிறுவனங்களினால் மனு ஊடாக தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன

இந்த மனுவில் தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான மேலதிக விசாரணைகளை மே மாதம் 5 திகதி   எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது