Connect with us

உள்நாட்டு செய்தி

தவறான அரசியல் தீர்மானத்தால் பாரிய அச்சுறுத்தல்

Published

on

‘ஒமிக்ரோன்’ வைரஸ்  பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறான அரசியல் தீர்மானத்தால் தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது.”என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தனப்பிரிய தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.