Connect with us

உள்நாட்டு செய்தி

நுவரெலியா ஹங்கல பகுதியில் விபத்து மூவர் பலி, விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பியோட்டம்

Published

on


நுவரெலியா ஹங்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டியும் பாரவூர்தியும் மோதியே இந்த விபத்து சம்பவத்துள்ளது.

மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் 51,52 மற்றும் 20 வயதான பெண்களே உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து எல்ல பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கர வண்டிக்கு முன்னாள் சென்ற கனரக வாகனத்தின் தடுப்பு செயற்படாது

போனமையால் குறித்த கனரக வாகனம் முச்சக்கர வண்டி மீது சாய்ந்துள்ளது.

இதனாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கனரக வாகன சாரதி விபத்தையடுத்து தப்பியுள்ளதாகவும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

கனரக வாகன சாரதியின் கவனயீனம் காரணமாகவே விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.