உள்நாட்டு செய்தி
7 மில்.டோஸ் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு.
ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வீ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை வெகு விரைவில் பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாக கொவிட் 19 ஒழிப்பிற்கான செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
ஸ்புட்னிக் வீ தடுப்பு மருந்தை இலங்கையில் அவசர கால தேவைக்கு பயன்படுத்த மார்ச் மாதம் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை அங்கீகரித்தது.
முதலாவது தொகுதியை நன்கொடையாக பெற்றுக்கொள்வது குறித்த கலந்துரையாடல் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்றுள்ளது.