முக்கிய செய்தி
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கான அமெரிக்காவின் ஆதரவு -ஜேக் சலிவன்-
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan)மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையிலான தொலைபேசிக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கான அமெரிக்காவின் ஆதரவு, சர்வதேச நாணய நிதியத்துடனான தற்போதைய வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கான சாத்தியங்களை பலப்படுத்த தொடர்ந்தும் அர்பணிப்பதாக சலிவன் உறுதியளித்தார் –