முக்கிய செய்தி
பண்டிகைக்காலத்தில் மின் துண்டிப்புகள் இல்லை !
பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் மின் துண்டிப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பண்டிகைக்காலத்தில் எவ்வித இடையூறுமின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அது சவாலான விடயமாக காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.இதனிடையே, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தேவையான எரிபொருளை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் காணப்படுவதாகவும் எவ்வித இடையூறும் இன்றி மக்களுக்கு அவசியமான எரிபொருளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, Indian Oil நிறுவனம் மற்றும் Sinopec ஆகிய நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.