முக்கிய செய்தி
முதலீட்டுச் சபையின் விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி..!
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆற்றிய சிறப்பான வகிபாகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முதலீட்டுச் சபையின் விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தெற்காசியப் பிராந்தியத்தில் விசேட பொருளாதார வலயங்களை (SEZs) நிறுவுவதில் இலங்கை முன்னோடியாக இருந்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கட்டுநாயக்க மற்றும் பியகம போன்ற முதலீட்டு வலயங்களுக்கு பிரதான முதலீட்டாளர்களை ஈர்ப்பதிலும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதிலும் வெற்றியடைந்துள்ளதாகவும் வலியுறுத்தினார்