முக்கிய செய்தி
நீர் பயன்பாடு 15% அதிகரிப்பு ; நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் !
தற்போதைய வறண்ட காலநிலை காரணமாக நீரின் பாவனை 15% அதிகரித்துள்ளதாகவும், நுகர்வோர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் அனுஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
ஹட்டன், கம்பலவத்தை, ஊருபொக்க, புஸ்ஸல்லாவ, மற்றும் கொட்டகலை ஆகிய நீர் விநியோக அமைப்புகளில் இருந்து தற்போது நுகர்வோரின் தேவைக்காக நீர் திறந்து விடப்படுவதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, கேகாலை மற்றும் குருநாகல் பிரதேசங்களில் உள்ள மூவாயிரம் குடும்பங்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.