முக்கிய செய்தி
4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !
4 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சதொச பால் மா, காய்ந்த மிளகாய், பச்சரிசி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (08) முதல் அமலுக்கு வருகிறது.
சதொச பால் மாவின் விலை 125 ரூபா குறைக்கப்பட்டு 935 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
காய்ந்த மிளகாயின் விலை 15 ரூபா குறைக்கப்பட்டு 1,175 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
பச்சரிசியின் விலை 5 ரூபா குறைக்கப்பட்டு 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
வெள்ளை சீனியின் விலை 3 ரூபா குறைக்கப்பட்டு 272 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.