முக்கிய செய்தி
இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்
இன்று ( 05) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.தொழிற்சங்கங்களின்படி, ரயில் இன்ஜின் சாரதிகள், ரயில்வே பாதுகாவலர்கள் மற்றும் கண்காணிப்பு முகாமையாளர்கள் உள்ளிட்ட ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள்.தமது சம்பளத்தை குறைக்கும் அமைச்சரவை பத்திரத்தை நீக்குமாறு கோரி இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.