முக்கிய செய்தி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 6 மாதங்களுக்கு பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானம்
தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சேவைகளை மேலும் 6 மாதங்களுக்கு பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கை விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று அறிவித்துள்ளார்.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையை மேலும் 6 மாதங்களுக்கு பேணுவதற்கு நிதி ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தெரிவித்தார்.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய 510 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதற்கான முன்மொழிவுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கான விலைமனு அழைப்பு 45 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.