முக்கிய செய்தி
கீரி சம்பா அரிசி உற்பத்தியை மேலும் விரிவுப்படுத்த வேண்டும்: அமைச்சர் மகிந்த அமரவீர

பொது மக்களுக்கு தேவையான அளவு கீரி சம்பா அரிசியை வழங்க வேண்டுமாயின் அதன் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இன்று (24.02.2024) பயிர்ச்செய்கை நிலங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர ஆலை உற்பத்தியாளர்களின் ஊடக சந்திப்பின் போதே உற்பத்தியாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.