முக்கிய செய்தி
சுகாதார அமைச்சின் அதிகாரிகள், சுகாதார சங்க பிரதிநிதிகள் இடையே மற்றுமொரு கலந்துரையாடல்

தொழிற்சங்க பிரதிநிதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளை சந்தித்து தமது கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உத்தேச கொடுப்பனவுக்கான செலவு மற்றும் செலுத்தும் திறன் ஆகியவற்றை கணக்கிடுவதற்கான அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாக கூட்டணியின் இணை அழைப்பாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளால் இந்த அறிக்கை தயாரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த அறிக்கையை தொகுத்ததன் பின்னர் கொடுப்பனவு தொடர்பான தகவல்கள் நிதியமைச்சிற்கு சமர்ப்பிக்கப்படும் என தர்மவிக்ரம தெரிவித்தார்.
சமீபத்தில், மருத்துவர்களுக்கு அரசு வழங்கிய ரூ.35,000 DAT கொடுப்பனவை, அவர்களுக்கும் வழங்கக் கோரி, 72 சுகாதார சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.