Connect with us

முக்கிய செய்தி

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய ஆணைக்குழு

Published

on

 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக இந்த சட்டமூலம் குறித்து விவாதம் நடத்த எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்.

ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபையால் நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களை இந்த ஆணைக்குழு உள்ளடக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்