முக்கிய செய்தி
ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் தொழில்நுட்ப கோளாறினால் மீண்டும் தரையிறக்கம்
மெல்பேர்ன் நகரிலிருந்து கொழும்பு வரை சேவையில் ஈடுபடும் விமானமொன்று தொழில்நுட்ப கோளாறினால் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் மெல்பேர்ன் நேரப்படி நேற்று(12) மாலை 6.18 அளவில் பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன் தொழில்நுட்ப கோளாறினால் மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
UL 605 AIRBUS A-3 30 வகையை சேர்ந்த விமானமொன்றே இவ்வாறு தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளாகியுள்ளது.
இந்த விமானத்தில் பயணத்த 15 விமான ஊழியர்கள் மற்றும் 202 பயணிகளுக்கான தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு நிவர்த்திக்கப்பட்டு மீண்டும் இலங்கை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.