முக்கிய செய்தி
வரலாறு காணாத விலை உயர்வு! நுவரெலியாவில் ஒரு கிலோ கரட் 1100 ரூபாவுக்கு விற்பனை!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை நேற்று (13) இரவு முதல் 1000 – 1100 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார் .
நுவரெலியா பிரதேசத்தில் உள்ள மரக்கறி விவசாயிகளிடம் இருந்து காரட்டை 900 ரூபாவிற்கு கொள்வனவு செய்ததாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
லீக்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் ஆகியவை ரூ.450-500க்கும், பீன்ஸ், கறி மிளகாய் ஆகியவை ரூ.750-800க்கும் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1600க்கும், முள்ளங்கி கிலோ ரூ.350க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுவரெலியா பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ காரட் 350-400 ரூபாவிற்கும், ஒரு கிலோ ப்ரோக்கோலி 750 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினத்தில் ப்ரோக்கோலி ஒரு கிலோ 7000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.