முக்கிய செய்தி
மின் கட்டணத்தை குறைக்க CEB நடவடிக்கை !
மின் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 18% மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இந்த 18% மின் கட்டண அதிகரிப்பில் 50% குறைக்க (9%) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மாதம் முதல் மின் கட்டண குறைப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனையை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் நோயல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பெய்த கடும் மழையினால் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் நீர்த்தேக்கங்களில் 1250 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவு காணப்பட்டது. இந்த நீர் கொள்ளளவானது அடுத்த 06 மாதங்களுக்கு தேவையான மின் உற்பத்திக்கு போதுமானதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.