முக்கிய செய்தி
அதிவேக நெடுஞ்சாலையில் லொறியுடன், வேன் மோதி கோர விபத்து..!தாய் மற்றும் மகள் உயிரிழப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹ தெப்மவில் இருந்து பத்தேகம வரையில்,
லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வங்கியின் பரவகும்புக கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய பெண் மற்றும் அவரது தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குருந்துகஹஹெதப்ம நுழைவாயிலில் இருந்து காலி நோக்கி மூன்று கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மகள் கொழும்பில் இருந்து இலங்கை வங்கியின் நலன்புரி வேனில் தனது தாயாரை வைத்தியரிடம் காட்டி மருந்து எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது,
லொறி ஒன்றின் பின்னால் மோதி இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.