முக்கிய செய்தி
மரக்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகரிப்பு..!
வரலாற்றில் அதிகளவு காய்கறிகளின் விலை நேற்று (03ம் திகதி) பதிவாகியுள்ளது.
தம்புள்ளை மொத்த சந்தையில் பெறப்படும் 60% மரக்கறிகளின் மொத்த விலை கிலோ ஐந்நூறு ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
📍கோவா,
📍போஞ்சி,
📍கேரட்,
📍தக்காளி,
📍வெண்டைக்காய்,
📍முள்ளங்கி,
உட்பட சில காய்கறிகளின் மொத்த விலை 300 முதல் 500 ரூபாய் வரை இருந்தது.
📍கத்தரிக்காய்,
📍பாகற்காய்,
📍பச்சை மிளகாய்,
📍பெரிய மிளகாய்
உள்ளிட்ட பல காய்கறிகளின் மொத்த விலை 500 ரூபாயை தாண்டியது.
அடுத்த பதினைந்து நாட்களில் ஒரு கிலோ காய்கறிகளின் மொத்த விலை ஆயிரம் ரூபாயை தாண்டும் என மொத்த வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையில், சில்லறை சந்தையில் காய்கறிகளின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.