Connect with us

முக்கிய செய்தி

மின்சார சபை முன் பாரிய போராட்டம் : குவிக்கப்பட்ட பொலிஸார்

Published

on

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இன்று (03.01.2024) கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்திற்கு விற்பனை
தற்போதைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு விற்பனை செய்யவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள ஆயிரக்கணக்கான மின்சார சபை ஊழியர்கள் மற்றும் மின்சார சபையுடன் தொடர்புடைய ஆறு சங்கங்களின் உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

மேலும் பாதுகாப்பு கருதி சம்பவ இடத்தில் பெருமளவிளான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.