Connect with us

முக்கிய செய்தி

வரி அடையாள எண் தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

Published

on

வரி இலக்கத்தை (TIN) பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை என நிதி அமைச்சை மேற்கோள் காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றால் மட்டுமே வருமான வரி செலுத்துபவராக மாறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும்  பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு நபரும் நடப்புக் கணக்கைத் தொடங்கும்போது, ​​கட்டிடத் திட்ட அனுமதி பெறும்போது, ​​மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது, ​​உரிமத்தைப் புதுப்பிக்கும் போது மற்றும் நில உரிமையைப் பதிவு செய்யும் போது வரி அடையாள எண்ணை (TIN) சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.