Connect with us

முக்கிய செய்தி

அதிகளவில் டெங்கு நோய் பரவும் நாடுகளில் இலங்கையும்.!

Published

on

டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது.

உலகளவில் அதிகளவில் டெங்கு நோய் பரவும் முதல் 30 நாடுகளில் இலங்கை உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

உலகளவில் டெங்கு நோய்த்தொற்றாளர்களில் இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள அதிகரிப்பு பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு உலகளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான டெங்கு நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை,

5,000க்கும் அதிகமான மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில், இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் அதிக டெங்கு அச்சுறுத்தலை எதிர்நோக்கும் முதல் 30 நாடுகளின் தரவரிசையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.