Connect with us

முக்கிய செய்தி

கல்வியாண்டு 2022 இற்கான, பல்கலைக்கழக விண்ணப்பங்கள் கோரல்…!

Published

on

நவம்பர் 24, 2023 அன்று வெளியிடப்பட்ட 2022 (2023) உயர்தரப் பரீட்சையின் மறு ஆய்வு முடிவுகளின்படி,

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2022 (2023) கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு,

இணையம் மூலம் தகுதியுடைய புதிய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை இன்று (22) முதல் 29 வரை கோருவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, அந்த விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk க்குச் சென்று விண்ணப்பங்களை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

எவ்வாறாயினும், பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் திறன் தேர்வுகளின் தற்போதைய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த வாய்ப்பு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.