Connect with us

முக்கிய செய்தி

முட்டை விலை மேலும் குறையும் – அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம்

Published

on

சந்தையில் முட்டை விலை மேலும் குறைவடையக்கூடுமென அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதிகளவான முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படாமல் பண்ணைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் உயர்வடைந்திருந்த முட்டையின் விலை தற்போது நாட்டின் பல பகுதிகளில் 50 முதல் 52 ரூபா வரையில் குறைவடைந்துள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் முட்டையில் விலை 30 முதல் 40 ரூபா வரையில் மேலும் குறையக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *