Connect with us

முக்கிய செய்தி

🔴உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் அறிவித்தல்!

Published

on

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது டிசம்பர் 29 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் தடையை மீறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சை திணைக்களம் ஏற்பாடுகளை செய்துள்ளது.