முக்கிய செய்தி
விவசாயிகளுக்கான விழிப்புணர்வு திட்டம்..!
கிளிநாச்சி மாவட்டத்தில் தொடரும் மழையுடனான காலநிலை காரணமாக நெற்செய்கைகளில் பாரிய அளவில் மடிச்சுக்கட்டி கபில நிறத்தத்தி, வெண்முதுகுத் தத்தி, எரிபந்தம் போன்ற நோய்களால் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 28,400 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு செய்கைகளில் முரசுமோட்டை, கண்டாவனை, பூனகரி, பளை, அக்கராயன் போன்ற பகுதிகளிலே அதிகளமான நோய் தாக்கம் ஏற்பட்டு பெருமளவான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நெல் வயல்களில் மடிச்சு கட்டி வென்முதுகு தத்தி, கபில நிறத்தத்தி, எரிபந்தம் போன்ற நோய்களுக்கு உள்ளாகி பெருமளவான பயிர்கள் அழிவடைந்த நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு நோய் தாக்கங்களால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன், பூநகரி, முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பணிமனையின் உத்தியோகத்தர்கள் கள விஜயம் மேற்கொண்டு விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி பெறுவதுடன் நோயை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகள் தொடர்பிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.