முக்கிய செய்தி
பாடசாலை விடுமுறை மற்றும் கற்றல் செயற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 2024 இற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 16ஆம் திகதி விடுமுறை விடப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி பாடசாலை ஆரம்பமாகும்.
புதிய ஆண்டிற்கான முதல் தவணை
விடுமுறை முடிந்து பாடசாலை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் புதிய ஆண்டிற்கான முதல் தவணை செயற்பாடுகள் பெப்ரவரி 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும்.
2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்திலேயே முதல் தவணை செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி 19ஆம் திகதி முதலாம் தவணையை ஆரம்பித்து நாங்கள் அதை முன்னோக்கி கொண்டு வந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 2024ஆம் ஆண்டிற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் முடித்துவிட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.