Connect with us

முக்கிய செய்தி

அவிசாவளையில் தீ பரவல் – 45 பேர் பாதிப்பு  

Published

on

 

அவிசாவளை பென்ரீத் தோட்டம் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் பரவிய தீயினால் 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீவிபத்து இன்று(01) முற்பகல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது . தீவிபத்தினால், குறித்த லயன் வீட்டு குடியிருப்பில் தங்கியிருந்த 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த லயன் குடியிருப்பின் 4 வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *