முக்கிய செய்தி
இரண்டு மதுபான நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
வரி நிலுவையை செலுத்தாத இரண்டு மதுபான நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை மதுவரி திணைக்களம் மீண்டும் இடைநிறுத்தியுள்ளது.
டபிள்யூ. எம். மெண்டிஸ் என்ட் கம்பனி மற்றும் ரந்தெனிகல டிஸ்டில்லரீஸ் ஆகிய நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள ஊடகப் பேச்சாளர் கபில குமார சிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கமைய, கடந்த சனிக்கிழமைக்குள் நிலுவைத் தொகையில் ஒரு பகுதியை செலுத்துவதற்கு குறித்த நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்திருந்தன.
இதன்படி, குறித்த இரண்டு நிறுவனங்களும் தலா 213 மில்லியன் ரூபாயை செலுத்த ஒப்புக்கொண்டிருந்த நிலையில், 8 இலட்சம் ரூபா மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.