முக்கிய செய்தி
ரணில் தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டுக்கு பயணம்:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய குழுவொன்று வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்ற ஜனாதிபதியின் ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 80 பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர் இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.
துபாயில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை தொடர்பான மாநாட்டுக்காகவே இந்த குழு பயணிக்கவுள்ளது.