முக்கிய செய்தி
2024 செப் 16 .- அக் 17. திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் – தேர்தல் ஆணையம்
எதிர்வரும் 2024 செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு இடைப்பட்ட ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க .தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான சரியான திகதி ஜூலையில் முடிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பிற்கு இணங்குவதை வலியுறுத்திய ரத்நாயக்க, தேர்தல் திகதியைத் தேர்ந்தெடுப்பதில் அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகிய இரண்டிலும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டார்.
மேலும் விளக்கமளித்த தேர்தல் ஆணையத்தின் தலைவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராவதற்கு, தேர்தல் பதிவேடு உருவாக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வாக்குச் சீட்டுகளை அச்சிடுதல் மற்றும் பிற ஆவணப் பணிகள் போன்ற நடவடிக்கைகளுக்கான நிதியைப் பாதுகாப்பது போன்ற அடுத்தடுத்த பணிகள் வரும் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி, பதவியேற்றவுடன் பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலை விரைவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டும் அடுத்த வருடம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.