Connect with us

முக்கிய செய்தி

லங்கா சதொசவில் ஒரு கிலோ வெள்ளை சீனி ரூ.275

Published

on

வெள்ளை சீனி கிலோ ஒன்றுக்கு 275 ரூபாவுக்கு (தற்போதைய கட்டுப்பாட்டு விலை) தொடர்ந்து விற்பனை செய்யவுள்ளதாக லங்கா சதொச முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி வாடிக்கையாளர் ஒருவருக்கு தலா 275 ரூபாவில் ஒரு கிலோ வெள்ளை சீனி மாத்திரமே வழங்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரவுன் சீனி கிலோ ஒன்று 330 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்படும் சீனியின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, சில லங்கன் சதொச கடைகளில் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.