Connect with us

முக்கிய செய்தி

O/L பரிட்சை பெறுபேறுகள் பற்றிய முக்கிய அறிவிப்பு

Published

on

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என,

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்,

விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மூன்று மாதங்கள் தாமதமானதாலேயே கடந்த உயர்தரப் பெறுபேறுகள் தாமதமாகிறது என்றும் தெரிவித்தார்.

சித்தியெய்திய மாணர்வர்களுக்கு நவம்பரில் உயர்தர வகுப்புகள் ஆரம்பமாவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.