Connect with us

முக்கிய செய்தி

மின் கட்டணம் குறித்து விசேட தீர்மானம்…!

Published

on

மின் கட்டணச் சேவைக்கு பதிவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை தனது வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.ebill.ceb.lk இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இல்லையெனில், 1987 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்புவதன் மூலமும் இந்த இ-மின் கட்டணச் சேவையில் பதிவு செய்து கொள்ளலாம்.அதற்கு, 1987 என்ற எண்ணுக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் EBILL<blank> மின்சாரக் கணக்கு எண்<blank> மின்னஞ்சல் முகவரி என குறுந்தகவலை (SMS) அனுப்ப வேண்டும்.தற்போது தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பிரதேசங்களிலும், மாத்தறை மற்றும் அம்பலாங்கொட பிரதேசங்களிலும் மட்டுமே EBILL வழங்கப்படுகின்றன.அதன்படி, அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கமாகும்.எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாடளாவிய ரீதியில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு இச்சேவையை வழங்குவதே இலக்கு என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.