Connect with us

முக்கிய செய்தி

பாரளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பில் எடுக்கப்பட்டவுள்ள தீர்மானம்

Published

on

பாரளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும், அவர்களின் சிறப்புரிமைகளை நிர்ணயம் செய்வதற்கும், ஒழுக்க மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் தனியான அதிகார சபையொன்றை அமைக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்று இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிகார சபையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவினை உள்ளடக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரிக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னரே பாரளுமன்ற உறுப்பினர்களது சிறப்புரிமையை மறுசீரமைப்பது மற்றும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பில் எடுக்கப்பட்டவுள்ள தீர்மானம் | Salaries Of Members Of Parliament To Be Increased

இதன் பிரகாரம் பல்வேறு கொள்கைகளை வகுக்கும் நோக்கில் இந்த அதிகார சபையை அமைப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை, பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பிரேரணையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.