Connect with us

முக்கிய செய்தி

100 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் திருட்டு…!

Published

on

நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 100 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் உள் பணியாளர்கள் புகார் அளித்துள்ளனர்.குருநாகல் மாவட்டத்தில் உள்ள களஞ்சியசாலையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கையளிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.