முக்கிய செய்தி
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் வைப்புத்தொகை அதிகரிக்க தீர்மானம்!
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ரூபா என்ற வைப்புத் தொகையை 26 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனையொன்று முன்மொழியப்பட்டுள்ளது.அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கான வைப்புத் தொகையை 75 ஆயிரம் ரூபாவிலிருந்து 31 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி வேட்பாளர் வைப்புச் செய்யக் கூடிய தொகையில் 25 இலட்சம் ரூபாயை திரும்பப் பெறக்கூடிய தொகையாகவும் எஞ்சிய ஒரு இலட்சம் ரூபாவை திருப்பிச் செலுத்த முடியாத வைப்புத் தொகையாகவும் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், சுயேச்சை வேட்பாளரின் வைப்புத் தொகையில், 30 இலட்சத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது