முக்கிய செய்தி
பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனா விஜயத்தில் ஈடுபடும் காலப்பகுதியில், அவர் வசம் உள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின் முதல் தடவையாக சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.சீனாவில் நடைபெறவுள்ள ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் 3ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பயணமாகியுள்ளார்.