முக்கிய செய்தி
ஜனாதிபதியின் கூட்டத்தில் மொழி தெரியாமல் தடுமாறிய மட்டக்களப்பு அரசியல் பிரமுகர்கள்
மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் இல்லாத காரணத்தினால் சில இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்ததாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்றையதினம் (15.10.2023) இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
எங்களோடு இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனையவர்கள் சிங்களம் தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
குறிப்பாக கூட்டத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களை சொல்லவும் முடியாமல் தாங்களும் கருத்துக்களை கூறவும் முடியத ஒரு நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.