Connect with us

முக்கிய செய்தி

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 4,200 ஆக உயர்வு..!

Published

on

கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,200 ஆக உயர்வடைந்துள்ளது.

தங்கள் நாட்டில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,300 ஆக கடந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் இதுவரை 1,417 பேர் உயிரிழந்ததாக பிராந்திய சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக மேற்குக் கரையில் 28 பேரும், லெபனானில் 6 பேரும் கொல்லப்பட்டர்.

இது தவிர, தங்கள் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 1,500 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 447 சிறுவர்களும், 248 பெண்களும் அடங்குவர் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதே வேளை
11 இலட்சம் மக்கள் வசிக்கும் பிராந்தியமான வடக்கு காசாவை விட்டு வெளியேற்றுவதற்கு இஸ்ரேலின் இராணுவம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்தத் தொகை அப்பிர தேசத்தில் வசிக்கும் அரைவாசி மக்கள் தொகையாகும் என ஐக்கிய நாட்டு சபை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இஸ்ரேலிய இராணுவம் இன்னும் இதனை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இது வரவிருக்கும் இஸ்ரேளின் தரைவழித் தாக்குதலுக்கான சமிஞ்சையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.